Bournemouth Tamil Sangam is a non-profit community organization. Its primary mission is to preserve and promote the Tamil language and culture, especially among the younger generation. In support of this goal, the Sangam runs a Tamil school offering classes from preschool up to Grade 8.
The Tamil school focuses on teaching students essential language skills—reading, writing, and speaking—as well as imparting a deep and accessible understanding of Tamil culture, traditions, and community identity.
Tamil is one of the world's oldest languages, with a rich heritage, vibrant culture, and respected art forms. Bournemouth Tamil Sangam is dedicated to passing on the pride and uniqueness of the Tamil language and culture to future generations by encouraging traditional art forms like Parai drumming and Bharatanatyam dance.
Bournemouth Tamil Sangam not only celebrates Tamil cultural festivals locally in Bournemouth but also actively participates in events held across the UK.
போர்ன்மவுத் தமிழ்ச் சங்கம் ஒரு இலாப நோக்கமற்ற சமூக அமைப்பாகும். தமிழ்மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாப்பதையும், இளைய தலைமுறையிடம் பரப்புவதையும் தனது முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளது. இந்த நோக்கத்தின் கீழ், சங்கம் பாலர் முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழ் பள்ளியை நடத்தி வருகிறது.
இந்தத் தமிழ் பள்ளி, மாணவர்களுக்கு வாசிப்பு, எழுதுதல், பேசுதல் ஆகிய மொழித்திறன்களையும், தமிழின் பண்பாடு, மரபுகள் மற்றும் சமூக அடையாளங்களையும் எளிமையாகவும் ஆழமாகவும் கற்றுத் தருவதை முக்கியமாகக் கொண்டு செயல்படுகிறது.
தமிழ், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். அதன் பாரம்பரியமும், செழுமையான கலாசாரமும், கலை வடிவங்களும் உலகளாவிய மரியாதைக்குரியவை. போர்ன்மவுத் தமிழ்ச் சங்கம், பறை, பரதநாட்டியம் போன்ற மரபுக் கலைகளை ஊக்குவிப்பதன் மூலம், தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமையை எதிர்கால தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
போர்ன்மவுத் தமிழ்ச் சங்கம், போர்ன்மவுத்தில் தமிழ் கலாசார விழாக்களை சிறப்பாகக் கொண்டாடுவதுடன், இங்கிலாந்து முழுவதும் நடைபெறும் பிற நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறது.
Address: Bournemouth School for Girls, Castle Gate Close, Castle Lane West, Bournemouth, Dorset, BH8 9UJ
Class Timings: Saturdays: 10:00 AM - 12:00 PM
முகவரி: போர்ன்முத் பெண்கள் பள்ளி, காஸில் கேட் கிளோஸ், காஸில் லேன் வெஸ்ட், போர்ன்முத், டார்செட், BH8 9UJ
வகுப்புகள் நேரம்: சனிக்கிழமைகள்: காலை 10:00 - 12:00
Bournemouth Tamil Palli is dedicated to teaching Tamil language and culture to the younger generation of the Tamil community in Bournemouth. We offer classes in reading, writing, and speaking Tamil.
போர்ன்முத் தமிழ் பள்ளி, போர்ன்முத் தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறைக்கு தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கற்றுத் தருவதில் அர்ப்பணித்துள்ளது. எங்கள் வகுப்புகள் தமிழில் வாசிப்பது, எழுதுவது மற்றும் பேசுவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.